சினிமா செய்திகள்

அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி. + "||" + Sings the introductory song: SBP told the story of Rajini's darbar

அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி.

அறிமுக பாடலை பாடுகிறார் : ரஜினியின் ‘தர்பார்’ கதையை சொன்ன எஸ்.பி.பி.
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
மும்பை பகுதியில் 2 மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிக பாதுகாப்பு போட்டுள்ளனர். ரஜினிகாந்த் படங்களில் அறிமுக பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வந்தது. ஆனால் ரஞ்சித் இயக்கிய முந்தைய 2 படங்களில் அவரை பாட வைக்கவில்லை. இது ரசிகர்களுக்கு குறையாக இருந்தது.

இப்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடல் ஒன்று இருப்பதாகவும் அதை நான் பாடி இருக்கிறேன் என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். அத்துடன் படத்தின் கதையையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறும்போது, “தர்பார் படத்தில் ரஜினிகாந்த் கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் செய்த ஒரு பெரிய காரியத்துக்காக பாராட்டு விழா நடத்துகின்றனர். அப்போது ரஜினிகாந்த் நான் கடமையைத்தான் செய்தேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா. போலீஸ் உடையை கழற்றினால் நானும் உங்களில் ஒருவன்தான் என்று வசனம் பேசுவார்.

தொடர்ந்து ஒரு பாடலை பாடுவார். அந்த பாடலைத்தான் நான் பாடி இருக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு படங்களின் வசூல் பாதிக்குமா?
ரஜினிகாந்துக்கு தெலுங்கு பட உலகில் ஒரு பெரிய `மார்க்கெட்’ இருப்பது அனைவரும் அறிந்த தகவல்.
2. ரஜினிகாந்த் படத்தில், திருநங்கை!
விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில், திருநங்கை ஜீவா நடித்து இருந்தார்.
3. ‘தர்பார்’ படப்பிடிப்பு 2 வாரத்தில் முடிகிறதா? ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
4. வைரலாகும் புகைப்படம் : படப்பிடிப்பில் பேரனுடன் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார்.
5. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி : மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி - நடிகர் ரஜினிகாந்த்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.