சினிமா செய்திகள்

கடந்த 6 மாதங்களில் ரூ.1,850 கோடிக்கு வியாபாரமான இந்தி படங்கள் + "||" + Hindi films worth Rs 1,850 crore

கடந்த 6 மாதங்களில் ரூ.1,850 கோடிக்கு வியாபாரமான இந்தி படங்கள்

கடந்த 6 மாதங்களில் ரூ.1,850 கோடிக்கு வியாபாரமான இந்தி படங்கள்
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 50 இந்தி படங்கள் திரைக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 50 இந்தி படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவற்றில் 3 படங்கள் வசூலில் 200 கோடியை எட்டி உள்ளன. 8 படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. 6 மாதங்களில் ரூ.1,850 கோடிக்கு மேல் இந்தி படங்களின் வியாபாரம் நடந்துள்ளன என்று புள்ளி விவர கணக்குகள் சொல்கின்றன.

அடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் முன்னணி நடிகர்கள் படங்கள் வர இருக்கின்றன. எனவே அடுத்த 6 மாதங்களில் மேலும் 2 ஆயிரம் கோடிக்கு இந்தி படங்களின் வியாபாரம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது நடந்தால் இந்த வருட இந்தி படங்களின் வியாபாரம் ரூ.3,850 கோடியாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு வியாபாரம் ரூ.3,500 கோடியாக இருந்தது.

ஜனவரியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நட்சத்திர அந்தஸ்து இல்லாத விக்கி கவுசல் நடித்து வெளிவந்த உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் ரூ.245 கோடி வசூலித்து பட உலகை அதிர வைத்தது. அதே மாதம் ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து கங்கனா ரணாவத் நடிப்பில் வந்த மணிகர்னிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி 118 கோடி வசூலித்தது.

பிப்ரவரியில் ராப் பாடகர்களை மையமாக வைத்து வந்த கல்லிபாய் ரூ.140 கோடி வசூலித்தது. அதே மாதத்தில் அனில் கபூர், அஜய்தேவ்கன், மாதுரி தீட்சித் நடிப்பில் வந்த டோட்டல் தமால் பணமழையை கொட்டியது. இது 150 கோடி வசூலித்தது. மார்ச் மாதம் வந்த லுக்க சுப்பி ரூ.95 கோடியும் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் வெளியான பட்லா ரூ.88 கோடியும் அக்‌ஷய்குமார் நடித்த கேசரி 155 கோடியும் வசூலித்தது.

ஏப்ரல் மாதம் வந்த அவஞ்சர்ஸ் எண்ட் கேம் ஹாலிவுட் படம் ரூ.370 கோடியை அள்ளியது. அஜய் தேவ்கன், தபு, ரகுல் பீரித் சிங் நடித்த பியார் டே படம் ரூ.100 கோடி வசூலித்தது.

மோடி வாழ்க்கை படமான பி.எம்.நரேந்திரமோடி ரசிகர்களை கவரவில்லை. ஜூனில் வெளியான சல்மான்கானின் பாரத் ரூ.210 கோடி வசூலித்தது அதேமாதம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக வந்த கபீர்சிங் பெரிய வெற்றிபெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது.