சினிமா செய்திகள்

வெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள் + "||" + Turns to web series Actor - Actress

வெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள்

வெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள்
வெப் தொடர்களுக்கு மாறும் நடிகர் - நடிகைகள், ரசிகர்களின் டிஜிட்டல் மோகத்தை உணர்ந்து திரையுலகினர் வெப் தொடர்கள், வெப் சினிமாக்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
முன்பெல்லாம் படங்கள் பார்க்க டெண்ட் கொட்டகைகளுக்கு போக வேண்டி இருந்தது. அதன் பிறகு தியேட்டர்கள், டெலிவிஷன், மல்டி பிளக்ஸ் என்று பரிணாமம் பெற்று கம்ப்யூட்டரில் படங்களை பார்த்தனர். இப்போது வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். ரசிகர்களின் டிஜிட்டல் மோகத்தை உணர்ந்து திரையுலகினர் வெப் தொடர்கள், வெப் சினிமாக்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.


இந்தியில் ஆரம்பித்த வெப் தொடர் சூறாவளி இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. வெப் தொடர்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் பொன்னியின் செல்வன் நாவலை ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா வெப் தொடராக எடுக்கிறார்.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனமும் வெப் தொடர்கள் தயாரிப்பில் இறங்கி உள்ளது. பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பாபி சிம்ஹாவும் வெப் தொடரில் நடிக்க வந்துள்ளார். நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ‘தளபதி’ என்ற வெப் தொடரில் நடிக்கிறார். நித்யாமேனன் ‘பிரீத்’ என்ற தொடரிலும், பிரியாமணி ‘பேமிலிமேன்’ தொடரிலும் நடிக்கின்றனர்.

இந்தியில் அக்‌ஷய்குமார் ‘த என்ட்’ என்ற அதிரடி வெப் தொடரிலும், அர்ஜுன் ராம்பால் ‘த பைனல் ஹால்’ தொடரிலும் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராப், அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாஜுதீன் சித்திக், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி, ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிகாரிகா, நடிகர் மஞ்சு விஷ்ணு, சந்தீப் கிஷன், அமலா, மஞ்சு லட்சுமி, ராணா, ஜெகபதி பாபு, நவதீப், தேஜஸ்வி, ஜே.டி.சக்கரவர்த்தி ஆகியோர் வெப் தொடருக்கு மாறி உள்ளனர்.