சினிமா செய்திகள்

மோசடி புகார்; பணம் பெற்று கொண்டு நடனம் ஆடாத நடிகை சோனாக்சி சின்ஹா மீது வழக்கு + "||" + UP Police: Cheating case registered against actress Sonakshi Sinha

மோசடி புகார்; பணம் பெற்று கொண்டு நடனம் ஆடாத நடிகை சோனாக்சி சின்ஹா மீது வழக்கு

மோசடி புகார்; பணம் பெற்று கொண்டு நடனம் ஆடாத நடிகை சோனாக்சி சின்ஹா மீது வழக்கு
நடிகை சோனாக்சி சின்ஹா ரூ.24 லட்சம் பணம் பெற்று கொண்டு மேடையில் நடனம் ஆடாததற்கு எதிராக அவர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தி திரையுலகை சேர்ந்த நடிகை சோனாக்சி சின்ஹா.  நடிகர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், மேடையில் நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வருடம் ரூ.24 லட்சம் பணம் பெற்று உள்ளார்.  ஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.  இதனால் அவருக்கு எதிராக கட்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர் மீது 420 (மோசடி) மற்றும் 406 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், இதுபற்றி விசாரணை மேற்கொள்ள உத்தர பிரதேச போலீசார் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.  ஆனால் அங்கு அவர் இல்லை.  தொடர்ந்து அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு: சுப்பிரமணிய சாமி மீது வழக்கு பதிவு சத்தீஷ்கார் போலீசார் நடவடிக்கை
சுப்பிரமணிய சாமி மீது வழக்கு பதிவு சத்தீஷ்கார் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2. காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
காவலாளி ஒரு திருடன் என கோஷம் எழுப்புங்கள் என தொடர்ந்து கூட்டத்தினரிடம் கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #RahulGandhi
3. 2 முறை ஓட்டு பதிவு செய்யுங்கள் என கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
வாக்காளர்களை 2 முறை ஓட்டு பதிவு செய்யும்படி பிரசாரத்தில் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
4. நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி; பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவு
நிர்மலா சீதாராமன் பெயரில் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார் என பா.ஜ.க. தேசிய செயலாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.