சினிமா செய்திகள்

காப்பான் படத்தில் வில்லனாக சூர்யா? + "||" + In the Kappan moive Surya as the villain charechtor

காப்பான் படத்தில் வில்லனாக சூர்யா?

காப்பான் படத்தில் வில்லனாக சூர்யா?
கதாநாயகர்கள் வில்லன் வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அஜித்குமார் வில்லத்தனமாக நடித்து வெளிவந்த மங்காத்தா படம் வசூல் அள்ளியது.
எந்திரன் படத்தில் ரஜினியின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே ‘24’ படத்தில் மூன்று வேடங்களில் வந்த சூர்யாவின் ஒரு கதாபாத்திரம் வில்லத்தனத்தை பிரதிபலித்தது. தற்போது காப்பான் படத்திலும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதில் சூர்யா உளவுத்துறை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதம மந்திரியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நல்லவர் போல் இருந்தாலும் அதில் வில்லத்தனம் இருக்கும் என்று டைரக்டர் கே.வி.ஆனந்த் தெரிவித்து உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

காப்பான் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.