சினிமா செய்திகள்

டுவிட்டரில் நடிகைக்கு தொல்லை + "||" + in the Twitter Actress trouble

டுவிட்டரில் நடிகைக்கு தொல்லை

டுவிட்டரில் நடிகைக்கு தொல்லை
நடிகைக்கு டுவிட்டரில் தொல்லை கொடுத்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.
வங்காள மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் அருணிமா கோஷ். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது டுவிட்டர் பக்கத்தில் இளைஞர் ஒருவர் 2 மாதங்களாக தொடர்ந்து ஆபாச கருத்துகளை பதிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் இழிவான வார்த்தைகளை பேசி மிரட்டலும் விடுத்தார். 

அவரது தொல்லை தாங்காமல் அருணிமா கோஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்போது அருணிமாவுக்கு தொல்லை கொடுத்தவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கர்பா பகுதியை சேர்ந்த முகேஷ் ஷா என்று கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். 

இவர் முகேஷ் மயுக் என்ற பெயரில் நடிகைக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அருணிமா கோஷ் கூறும்போது, ‘‘நான் என்ன செய்கிறேன். எங்கு செல்கிறேன். என்று ஒவ்வொரு அசைவையும் கண்டுபிடித்து வலைத்தளத்தில் பதிவிட்டு தொல்லை கொடுத்தான். மிரட்டவும் செய்தான். அவனது தொந்தரவு எல்லை மீறியதால் போலீசில் சொன்னேன்’’ என்றார்.