சினிமா செய்திகள்

புதிய இந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் தனுஷ் + "||" + In the new Hindi film Starring Hrithik Roshan Dhanush

புதிய இந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் தனுஷ்

புதிய இந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் தனுஷ்
தனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். ராஞ்சனாவில் ஜோடியாக சோனம் கபூர் நடித்தார்.
இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார். இதில் தனுஷ் வாய்பேச முடியாதவராக வந்தார்.

இரண்டு படங்களுக்குமே இந்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ‘த எக்ஸ்டிரானரி ஜார்னி ஆப் த பகிர்’ என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக வந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது இரண்டு கதாநாயகர்கள் கதை. இன்னொரு நாயகனாக பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். கதாநாயகியாக சாரா அலிகான் வருகிறார்.


இந்த படத்தை ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்கிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. சென்னை அருகே பூந்தமல்லியில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்தினார்கள்.

இதில் தனுஷ் கலந்துகொண்டு பேசும்போது, “எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ரசிகர்களின் அன்பு மட்டும் போதும். அன்பு மட்டுமே நிரந்தரம். யாரையும் பற்றி விமர்சிக்க வேண்டாம்” என்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...