சினிமா செய்திகள்

கிழிந்த பேண்ட் அணிந்த நடிகைக்கு எதிர்ப்பு - நடிகை கிரித்தி கர்பண்டா + "||" + Opposition to the actress Actress Kriti Kharbanda

கிழிந்த பேண்ட் அணிந்த நடிகைக்கு எதிர்ப்பு - நடிகை கிரித்தி கர்பண்டா

கிழிந்த பேண்ட் அணிந்த நடிகைக்கு எதிர்ப்பு - நடிகை கிரித்தி கர்பண்டா
நடிகைகள் பட விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை உடையில் கவர்ச்சியாக செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சமூக வலைத்தள பக்கங்களிலும் நீச்சல் உடை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். பட வாய்ப்புகளுக்காகவே அவர்கள் அரைகுறை ஆடைகள் அணிவதாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஏற்கனவே விமர்சித்தார்.

அவர் கூறும்போது, எந்த வகையான உடைகளை அணிய வேண்டும் என்று நடிகைகளுக்கு தெரியவில்லை. உடம்பை காட்டும் உடைகளை அணிந்தால்தான் கதாநாயகர்களும், இயக்குனர்களும் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நினைக்கிறார்களோ? தெரியவில்லை என்றார். விமர்சனங்களை பொருட்படுத்தாமல் நடிகைகள் கவர்ச்சி படங்களை தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.


இந்த நிலையில் நடிகை கிரித்தி கர்பண்டா வெளியிட்டுள்ள கவர்ச்சி படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக புரூஸ்லி படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘வான்’ என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

கிரித்தி தனது கவர்ச்சி படங்களை டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். இப்போது கிழிந்த பேண்ட் அணிந்து கால்பகுதிகள் தெரியும் வகையில் போஸ் கொடுத்துள்ள படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள். இது என்ன ஆடை? இப்படியெல்லாம் ஆபாசமாக போஸ் கொடுக்கலாமா’ என்று வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் கிழிந்த பேண்ட்டில் கிரித்தி கர்பண்டா கவர்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதாக பாராட்டி உள்ளனர்.