சினிமா செய்திகள்

மன அழுத்த நோயில் இருந்து மீண்ட தீபிகாபடுகோனே + "||" + Stress In the wake of disease Deepika Padukone

மன அழுத்த நோயில் இருந்து மீண்ட தீபிகாபடுகோனே

மன அழுத்த நோயில் இருந்து மீண்ட தீபிகாபடுகோனே
தீபிகா படுகோனேவுக்கு மன அழுத்த நோய் இருந்தது. தற்போது தீவிர சிகிச்சை எடுத்து குணமாகி இருக்கிறார்.
ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படம் எதிர்ப்பை மீறி திரைக்கு வந்து வசூல் குவித்தது. பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


தீபிகா படுகோனேவுக்கு மன அழுத்த நோய் இருந்தது. இதனால் புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது தீவிர சிகிச்சை எடுத்து குணமாகி இருக்கிறார். மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டது குறித்து அவர் கூறியதாவது:-

“மன அழுத்த நோய் ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் யாருக்கு வேண்டுமானாலும் வரும். அதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைய முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் அதை மறைக்க கூடாது. டாக்டரிடம் சென்று உண்மையை கூற வேண்டும்.

மன அழுத்த நோய் ஏற்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாகவே இருக்கும். மன சோர்வு ஏற்படும். வேலையில் கவனம் வராது. சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பார்கள். யாருமே தனக்கு மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவது இல்லை. அந்த நோய் பாதிப்பில் சிக்கியவர்கள் வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள்.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.