சினிமா செய்திகள்

பார்வையற்றவரை காதலிக்கும் கதாநாயகி + "||" + heroine loves the blind

பார்வையற்றவரை காதலிக்கும் கதாநாயகி

பார்வையற்றவரை காதலிக்கும் கதாநாயகி
வைபவ் கதைநாயகனாகவும், பல்லோக் லால்வானி கதாநாயகியாகவும் நடித்த படம், ‘சிக்ஸர்.’ இது, நகைச்சுவை படம்.
‘சிக்ஸர்’  படத்தை பற்றி அதன் டைரக்டர் சாச்சி கூறியதாவது:-

“இது, ஒரு நகைச்சுவை படம். இதில் வைபவ் கண்பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். அவரை காதலிக்கும் ஐ.டி. ஊழியராக பல்லோக் லால்வானி நடித்துள்ளார் இவர்களுடன் ராதாரவி, இளவரசு, சதீஷ், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். வால்மேட் என்டர்டைன்மென்ட் நிறுவனமும், டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.

இந்த படத்துக்கு எல்லா தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. கதாநாயகன் வைபவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். நகைச்சுவையாக நடிப்பதற்கு ஒரு திறமை வேண்டும். அதில் வைபவ் திறமையானவர். கதைப்படி, அவருக்கு மாலை 6 மணிக்கு மேல் கண்பார்வை தெரியாது. அது வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அவரை ஐ.டி. ஊழியரான பல்லோக் லால்வானி காதலிக்கிறார் இருவருக்கும் இடையேயான காதலும், மோதலும் சுவாரஸ்யமாக இருக்கும்.”