சினிமா செய்திகள்

விலங்குகளை நேசிக்கும் காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal who loves animals

விலங்குகளை நேசிக்கும் காஜல் அகர்வால்

விலங்குகளை நேசிக்கும் காஜல் அகர்வால்
கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:- ‘எனக்கு குதிரைகள் பிடிக்கும். மகதீரா படத்தில் நடிக்கும்போது ராம்சரண் வெளிநாடுகளில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்வார். அந்த குதிரைகளை பார்த்த பிறகு எனக்கு அவற்றின் மீது பிரியம் ஏற்பட்டு விட்டது. குதிரைகள் கும்பலாக ஓடும்போது பார்க்க இரண்டு கண்களும் போதாது. அவ்வளவு அழகாக இருக்கும்.எனக்கு வாயில்லா ஜீவன்கள் மீது எப்போதுமே அன்பு உண்டு. ஆனால் அவற்றை எப்படி வளர்ப்பது என்று தெரியாது. நான் விலங்குகளை நேசிக்க கற்றுக்கொண்டதில் இருந்து மாமிச உணவு சாப்பிடுவதை நிறுத்தி சுத்த சைவமாகி விட்டேன். இதற்கு முன்பெல்லாம் மாமிச உணவை விரும்பி சாப்பிடுவேன். இப்போது அதை தொடுவது இல்லை.

நான் இப்போது இந்தி படமொன்றில் நடிக்கிறேன். அதில் மூன்று தோற்றங்களில் வருகிறேன். அதில் ஒரு தோற்றத்தில் 17 வயது பெண்ணாக நடிக்க வேண்டும். இதற்காக உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி என்று இருக்கிறேன். அந்த தோற்றத்துக்கு என்னை கொண்டு வர தொழில்நுட்பமும் உதவும். இது எனக்கு சவாலான வேடமாக இருக்கும்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன்- 2 படப்பிடிப்பு விபத்து: அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் - காஜல் அகர்வால்
இந்தியன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
2. “விரைவில் திருமணம்” -காஜல் அகர்வால்
விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
3. “திருமணத்தில் நம்பிக்கை உள்ளது” - காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் வைத்துள்ளார்.