சினிமா செய்திகள்

“அழகாக இருந்தால் மட்டும் படங்கள் ஓடிவிடாது” - நடிகை சமந்தா + "||" + “Movies don't just running if they're beautiful only ” - actress Samantha

“அழகாக இருந்தால் மட்டும் படங்கள் ஓடிவிடாது” - நடிகை சமந்தா

“அழகாக இருந்தால் மட்டும் படங்கள் ஓடிவிடாது” - நடிகை சமந்தா
கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாடு சென்றுள்ள நடிகை சமந்தா தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“குடும்ப வாழ்க்கையில் எந்த முடிவுகளையும் சுயமாக எடுத்துக்கொள்ள எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. தொடந்து வெற்றி படங்களில் நடிப்பதாக என்னை பாராட்டுகிறார்கள். வரிசையாக எனக்கு நல்ல படங்கள் வருகிறது. அவை வெற்றியும் பெறுகின்றன. அது இன்னும் சந்தோஷத்தை கொடுக்கிறது.

எனது படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தருவதால் இன்னும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. திறமை இருந்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். நடிகை அழகாக இருந்தால் மட்டும் படம் ஓடிவிடும் என்ற நிலைமைகள் இப்போது இல்லை. கதாநாயகர்களை விட கதாநாயகிகள் அதிக கஷ்டப்படுகிறார்கள்.

தொடர் வெற்றி படங்களில் நடித்ததால் எனக்கு வெற்றியின் ரகசியம் தெரிந்து விட்டது என்று நினைத்து விடாதீர்கள். அதை யாரும் தெரிந்து கொள்ள முடியாது. நான் இயக்குனராக போவதாக தகவல்கள் பரவுகின்றன. அந்த மாதிரி எண்ணம் இல்லை. ஆனால் பெண்கள் பிரச்சினைகள் சம்பந்தமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. எதிர்காலத்தில் தயாரிப்பாளராக களம் இறங்குவேன். இந்த தலைமுறையில் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு?
நடிகை சமந்தா நடிப்பிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. சமந்தாவின் மாறுபட்ட கருத்து!
ஐதராபாத்தில், ஒரு பெண் கால்நடை மருத்துவர் 4 பேரால் கற் பழித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியது.