சினிமா செய்திகள்

தமன்னாவின் அழகு ரகசியம் + "||" + The beauty secret of Tamanna

தமன்னாவின் அழகு ரகசியம்

தமன்னாவின் அழகு ரகசியம்
நடிகை தமன்னா தனது அழகு ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா ஆக்‌ஷன், பெட்ரோமாக்ஸ் என்று 2 தமிழ் படங்களிலும் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற தெலுங்கு படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-

“என்னை பாக்கிறவர்கள் அழகு குறையவே இல்லை என்கிறார்கள். அது என் குடும்பத்தில் இருந்து வந்தது. நடிப்பு தொழிலை நேசிப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய முடிகிறது. 10 ஆண்டுகளில் எவ்வளவோ முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அதனால்தான் நல்ல கதைகளை தேர்வு செய்ய முடிகிறது.


கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடம்பை மாற்றிக்கொள்வேன். நடிகையாக ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக கடத்துகிறேன். சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது. நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது பிடிக்காது. எனது பாதையில் போகிறேன்.

வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை. ரசிகர்கள் அதிக அன்பு காட்டுகிறார்கள். இமேஜ் பிடிக்காது. இயல்பாக நடிக்க பிடிக்கும். மத்தியானம் உடற்பயிற்சி செய்வேன். அப்போது நிறைய கலோரிகளை குறைக்க முடியும். நான் ஒல்லியாக இருக்க அதுவும் காரணம். யோகா செய்வேன். ஒரு நாளைக்கு கண்டிப்பாக 7 மணிநேரம் தூங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறேன்.

அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவது இல்லை. பாக்கெட் உணவுகளை சாப்பிட மாட்டேன். இதுதான் என் அழகின் ரகசியம்.” இவ்வாறு தமன்னா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு இருவரும் கடவுள் மாதிரி: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் நடிக்க தயார் நடிகை தமன்னா பேட்டி
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் நடிக்க தயார் என்றும், அவர்கள் இருவரும் எனக்கு கடவுள் மாதிரி எனவும் நடிகை தமன்னா கூறினார்.
2. வித்தியாசமான கதாபாத்திரங்களில் “சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” - நடிகை தமன்னா சொல்கிறார்
“வித்தியாசமான கதாபாத்திரங்களில், சுந்தர் சி.யுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன்” என்று நடிகை தமன்னா கூறினார்.
3. நீச்சல் உடையில், தமன்னா!
தமன்னா முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நீச்சல் உடையில் நடித்து இருக்கிறார்.
4. 13 வருடங்கள் கதாநாயகியாக நீடிப்பது மகிழ்ச்சி - தமன்னா
தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:-
5. ‘காதல்’ என்றதும் கடுப்பான நாயகி!
தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா.