சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்? + "||" + Ajith to be a police officer in the new film?

வைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?

வைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?
புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.


முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.

இந்த நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைராகி வருகிறது. இதுதான் அஜித்குமாரின் வேடமா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியதாகவும், அவருக்கு கால்ஷீட் இல்லை என்பதால் பிரபல இந்தி நடிகையை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் அஜித்குமார் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : பியூஜி பிலிமின் ‘எக்ஸ்.100 வி’
கேமரா உள்ளிட்ட புகைப்படம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பியூஜி பிலிம் நிறுவனம் ‘எக்ஸ்.100 வி’ கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
2. வைரலாகும் மஞ்சு வாரியர், நவ்யா நாயர் செல்பி
நடிகைகள் மஞ்சு வாரியர் மற்றும் நவ்யா நாயர் எடுத்த செல்பி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.