சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது? + "||" + Cinema Question Answer! Guruvayare: Guruvayare, Which is the next film to be screened by Ajit Kumar?

சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது?

சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது?
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
தமிழ் பட உலகில் இருந்து இந்தி பட உலகுக்கு செல்லும் கதாநாயகிகள் பல மடங்கு அதிகமாக சம்பளம் பெறுவது உண்மையா? (பி.ராஜேஷ், விருத்தாசலம்)

உண்மை அல்ல. தமிழ் படத்தை விட, இந்தி படத்துக்கு குறைவான சம்பளமே பெறு கிறார்கள்!

***

குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது? (மே.கோதண்டபாணி, தஞ்சை)

அஜித்குமார் மீண்டும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டைரக்டர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்-வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது? (எஸ்.சி.ஸ்டீபன், மறவன் குடியிருப்பு)

‘வசந்த மாளிகை.’ திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, வெற்றி பெற்ற படம் அது. பல தியேட்டர்களில் அந்த படம் வெள்ளி விழா கொண்டாடியது. சில தியேட்டர்களில் 100 நாட் கள் ஓடி வெற்றி கண்டது!

***

“கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா” என்ற பாட்டுக்கு விஜய்யுடன் ஆடிய சாயாசிங்குக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா? (பெ.நரேஷ், ஊட்டி)

சாயாசிங்குக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருடைய கணவர் பெயர், கிருஷ்ணா. இவர், டி.வி.நடிகர் ஆவார். ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற படத்தில், சாயாசிங்குடன் நடித்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்!

***

குருவியாரே, ‘பாகுபலி’ நாயகன் பிரபாசை அனுஷ்கா எப்படி அழைக்கிறார்? உறவுமுறை சொல்லியா அல்லது நட்புமுறை சொல்லியா? அதே படத்தில் வில்லனாக நடித்த ராணாவை எப்படி அழைக்கிறார்? (எம்.ராதாபாண்டியன், மதுரை)

பிரபாசை, “பிரபா” என்றும், ராணாவை, “பிரதர்” என்றும் அழைக் கிறார், அனுஷ்கா!

***

சிம்பு தனக்கான இல்லத்தரசியை தேர்ந்தெடுத்து விட்டாரா? (எஸ்.பி.அன்பழகன், கடலூர்)

இன்னும் தேர்வு செய்யவில்லையாம். அவர் மனம் கவர்ந்த ஒரு நாயகியும் ‘மணமகள் பட்டியலில்’ இருக்கிறாராம்!

***

சிவகார்த்திகேயனுக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டி மனப்பான்மை வளர்ந்து வருவது உண்மையா? (செல்வகுமார், மயிலாடுதுறை)

தொழிலில் போட்டி இருப்பது ஆரோக்கியமானதுதானே...அந்த வகையில் இரண்டு பேருக்கும் தொழில் போட்டி இருப்பது, அவர்களின் வளர்ச்சியையே காட்டுகிறது!

***

குருவியாரே, ‘களவாணி’ நாயகன் விமலுக்கு அதிக பட வாய்ப்புகள் வராதது ஏன்? (கோ.பிரவீன்குமார், பண் ருட்டி)

அவரே சொந்த படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டதால், மற்ற தயாரிப்பாளர்கள் விலகி செல் கிறார்களாம்!

***

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் எப்படிப்பட்ட சுபாவம்? அவருடைய மார்க்கெட் அந்தஸ்து எப்படி இருக்கிறது? (எம்.மோகன் குமார், கொடைக்கானல்)

கவுதம் கார்த்திக், அப்பா கார்த்திக் போலவே கலகல சுபாவம் கொண்டவர். அவருடைய மார்க்கெட் அந்தஸ்து உயரவும் இல்லை. கீழே தாழ்ந்து போய்விடவும் இல்லை!

***

குருவியாரே, தனுஷ் படத்துக்கு படம் கதாநாயகிகளை மாற்றிக் கொண்டே போவது ஏன்? (வி.ராம்குமார், குலசேகரன்பட்டினம்)

கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்வது, கதாநாயகன் தனுசின் வேலை அல்ல. அது டைரக்டருக்கான வேலை!

***

டைரக்டர்-நடிகர் சமுத்திரக்கனியின் அடுத்த படம் எது? (க.சூரிய பிரகாஷ், மேல அழகுநாச்சியாபுரம்)

சமுத்திரக்கனியின் அடுத்த படம், ‘சாட்டை-2’

***

பழம்பெரும் நடிகை விஜயகுமாரி இன்னும் இளமையாக உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாரே...அதன் ரகசியம் என்ன? (பி.முனிசாமி, திண்டுக்கல்)

ரகசியம், ரகசியமாகவே இருக்கட்டும் என்கிறார், விஜயகுமாரி!

****

குருவியாரே, எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ படத்தை தயாரித்த நிறுவனம் எது? (பா.தமீம் அன்சாரி, பேட்மாநகரம்)

நாகிரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.

***

எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஆகவில்லையா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் ஆகாத இளைஞர்தான்!