சினிமா செய்திகள்

கல்லூரி மாணவராக நடிக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடி, வர்ஷா பொல்லம்மா + "||" + In the movie starring as a college student GV Prakash Jodi Warsha Pollamma

கல்லூரி மாணவராக நடிக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடி, வர்ஷா பொல்லம்மா

கல்லூரி மாணவராக நடிக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடி, வர்ஷா பொல்லம்மா
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ்குமார் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
ஜீ.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர், ‘சீமதுரை,’ ‘96,’ ‘பிகில்’ ஆகிய படங்களில் நடித்தவர்.

முக்கிய கதாபாத்திரத்தில் வாகை சந்திரசேகர் நடிக்கிறார். குணா என்ற புதுமுக நடிகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘அண்ணனுக்கு ஜே,’ ‘வெள்ளை யானை’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ரங்கசாமி ஒளிப் பதிவு செய்கிறார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த மதிமாறன் புகழேந்தி டைரக்டராக அறிமுகமாகிறார். கே.புரொடக்‌ஷன்ஸ்சார்பில் எஸ்.என்.ராஜராஜன்தயாரிக் கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் மதிமாறன் புகழேந்தி கூறும்போது, “இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கல்லூரி மானவராக நடிக்கிறார். ஒரு மாணவருக்கு கல்லூரிக்கு வெளியில் நடக்கும் இன்னல்களை அதிரடி அம்சங்கள் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.