சினிமா செய்திகள்

எல்லை மீறும் ரசிகர்கள் நடிகை டாப்சி வருத்தம் + "||" + Actress Topsee is upset

எல்லை மீறும் ரசிகர்கள் நடிகை டாப்சி வருத்தம்

எல்லை மீறும் ரசிகர்கள் நடிகை டாப்சி வருத்தம்
ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறிவிடுகிறது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. தற்போது 3 இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிங்க் படம் அஜித்குமார் நடிப்பில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் வந்தது.

 சினிமா வாழ்க்கை குறித்து டாப்சி கூறியதாவது:–

‘‘நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். நான் பிரபலமாக இருப்பது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். நடிகர்–நடிகைகளுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது.

நான் நடிகையாவதற்கு முன்னால் தோழிகளுடன் சாலைகளில் நடந்து சென்று இருக்கிறேன். வணிக வளாகங்களுக்கும் சேர்ந்து செல்வோம். ஓட்டல்களை தேடி சென்று சாப்பிடுவோம். ஆனால் இப்போது அப்படி போக முடியவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்கள். 

சில நேரம் அந்த அன்பு எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எனது உடைகளை கூட வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன்.’’

இவ்வாறு டாப்சி கூறினார்.