சினிமா செய்திகள்

28-வது படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா - ஸ்ரதா ஸ்ரீநாத் + "||" + Vishal paired with Regina - Shraddha Srinath in the 28th film

28-வது படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா - ஸ்ரதா ஸ்ரீநாத்

28-வது படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா - ஸ்ரதா ஸ்ரீநாத்
தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான விஷால், திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிறது. பதினைந்து ஆண்டுகளில் அவர் 27 படங்களில் நடித்து இருக்கிறார்.
விஷாலின் 28-வது படத்தை சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியே தயாரிக்கிறது. அதில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். 

ஸ்ரதா ஸ்ரீநாத், `விக்ரம் வேதா,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய 2 படங்களிலும் நடித்தவர். ரெஜினா கசண்ட்ரா, `ராஜதந்திரம்,' `மாநகரம்' படங்களில் நடித்தவர்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை மீண்டும் சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. துரோகம் செய்து விட்டார் “விஷாலை சும்மா விடமாட்டேன்” டைரக்டர் மிஷ்கின் ஆவேசம்
விஷாலை சும்மா விடப்போவது இல்லை என்று டைரக்டர் மிஷ்கின் கூறினார்.
2. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி!
விஷால் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம், `சக்ரா.' இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா கசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.
3. மீண்டும் களம் இறங்கும் விஷால் கோஷ்டி தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் மோதல்?
டைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த முயற்சி நடக்கிறது எனவும் அவர் மறுத்தால் டி.ஜி.தியாகராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. விஷால் கோஷ்டி மீண்டும் களம் இறங்குகிறது.