சினிமா செய்திகள்

வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்: ஜெயலலிதாவாக மாறும் கங்கனா + "||" + Make Up Test Photo as Viral ; Kangana to become a Jayalalithaa

வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்: ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்: ஜெயலலிதாவாக மாறும் கங்கனா
ஜெயலலிதா வாழ்க்கை விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
கங்கனா ரணாவத் இதில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். 

தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றுவதற்கான ‘மேக்கப் டெஸ்ட்’ அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதற்காக கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். அங்கு கங்கனாவை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்ற மேக்கப் போட்டனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கூறும்போது, “இப்படி கஷ்டப்பட்டுத்தான் உருவத்தை மாற்றுவதற்காக மேக்கப் போடுகிறார். ஒரு நடிகைக்கு இது எளிதான காரியம் இல்லை. அவரை பார்க்க எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் கங்கனா அமைதியாகவே இருந்தார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. உடல் எடையை கூட்டி, குறைத்தார்!
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, `தலைவி' என்ற பெயரில் படமாகி வருகிறது.