சினிமா செய்திகள்

சமந்தாவுக்கு சவாலான கதாபாத்திரம் + "||" + A challenging character for Samantha

சமந்தாவுக்கு சவாலான கதாபாத்திரம்

சமந்தாவுக்கு சவாலான கதாபாத்திரம்
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘96’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. நீண்ட காலத்துக்கு பிறகு வந்த சிறந்த காதல் படம் என்று திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டினார்கள்.
விஜய் சேதுபதி-திரிஷா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘96’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. நீண்ட காலத்துக்கு பிறகு வந்த சிறந்த காதல் படம் என்று திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டினார்கள். இந்த படம் கன்னடத்தில் பாவனா நடித்து திரைக்கு வந்தது. தெலுங்கிலும் 96 என்ற பெயரிலேயே ரீமேக் ஆகி உள்ளது. இதில் திரிஷாவின் ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும். விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும் நடித்துள்ளனர். தமிழில் இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கு 96 ரீமேக்கையும் டைரக்டு செய்தார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து தற்போது முடிந்துள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறியதாவது:-

“நேற்றை விட இன்றைய தினம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அந்த வகையில் எனக்கு சவால் விட்ட சிறந்த கதாபாத்திரமாக 96 படத்தில் நடித்த ஜானு கதாபாத்திரம் அமைந்து இருந்தது. எனது சினிமா வாழ்க்கையில் மறுபடியும் ஒரு முக்கிய படத்தில் நான் நடித்து இருக்கிறேன். மிக சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த உணர்வை இந்த சினிமா எனக்கு கொடுத்தது. தமிழில் திரிஷா சிறப்பாக நடித்து இருந்தார். தொடர்ந்து 3 வெற்றி படங்கள் கொடுத்தேன். இதுவும் வெற்றி படமாக அமையும்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.