சினிமா செய்திகள்

விரைவில் கைதி திரைப்படத்தின் 2-ம் பாகம் - இயக்குனர் சூசக தகவல் + "||" + Soon the kaithi movie Part 2 Director Susaka Information

விரைவில் கைதி திரைப்படத்தின் 2-ம் பாகம் - இயக்குனர் சூசக தகவல்

விரைவில் கைதி திரைப்படத்தின் 2-ம் பாகம் - இயக்குனர் சூசக தகவல்
கைதி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
சென்னை,

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முழுக்க இரவிலேயே நடக்கும் கதை, ஹீரோயின், பாடல்கள் என வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி தனித்து நிற்கும் இந்தப் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் கார்த்தி ஏற்று நடித்திருக்கும் டெல்லி கதாபாத்திரமும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பவிடாமல் நம்மை திரையிலேயே கவனம் செலுத்த வைத்து விடுகிறார் இயக்குனர். 

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருப்பதோடு, டெல்லி மீண்டும் வருவார் என்று கூறியுள்ளார். இதன்மூலம் கைதி படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பது உறுதியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
2. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது
இந்தியாவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன 10 ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் பிகில் இடம் பெற்றுள்ளது.
3. பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் ...!
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
4. ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர்: சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
5. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.