சினிமா செய்திகள்

வெப் தொடரில் வின்சென்ட் அசோகன் + "||" + Vincent Asokan in web series

வெப் தொடரில் வின்சென்ட் அசோகன்

வெப் தொடரில் வின்சென்ட் அசோகன்
நடிகர் நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளனர்.
கள்ளச்சிரிப்பு, ஆட்டோ சங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ்-அப் வேலைக்காரி, மிட்டா, திரவம், பிங்கர் டிப், போஸ்ட்மேன் உள்ளிட்ட பல வெப் தொடர்கள் வெளிவந்துள்ளன. தற்போது வின்சென்ட் அசோகனும் ‘போலீஸ் டைரி 2.0’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதில் சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமச்சந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ், பாலாஜி மோகன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். இந்த வெப் தொடரை குட்டி பத்மினி தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் பதிவான 52 கொடிய குற்றச்சாட்டுகளை விவரிக்கும் கதையம்சத்தில் தயாராகி இரண்டு அத்தியாயங்களாக வெளியிடப்படுகிறது. இயக்குனர்கள் சிவமகேஷ், தனுஷ், பா.ராஜகணேசன், பவன், விக்ரமன், ரமேஷ் பாரதி ஆகியோர் வெப் தொடர்களை இயக்கி உள்ளனர். இதுபற்றி குட்டி பத்மினி கூறும்போது, “போலீஸ் டைரி 2.0 தொடர் மாநிலத்தில் நடந்த பல குற்றச்சாட்டுகளின் கலவை. பார்வையாளர்கள் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த தொடர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்றார்.