சுசிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் மாயமான பாடகி சுசித்ரா மீட்பு


சுசிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் மாயமான பாடகி சுசித்ரா மீட்பு
x
தினத்தந்தி 15 Nov 2019 4:30 AM IST (Updated: 15 Nov 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து சுசித்ரா அடையாறில் உள்ள தங்கை வீட்டில் சில ஆண்டுகளாக தங்கியிருந்ததாக கூறப்பட்டது.

மிழ் பட உலகில் ‘மே மாசம் 98-ல் மேஜர் ஆனேனே’, ‘டோலு டோலு தான் அடிக்கிறான்’, ‘வாடா பின்லேடா’, ‘குட்டி பிசாசே குட்டி பிசாசே’ போன்ற பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி சுசித்ரா. ‘ஜே.ஜே.’, ‘ஆயுத எழுத்து’, ‘பலே பாண்டியா’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

சுசித்ரா கடந்த ஆண்டு நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் ‘சுசி லீக்ஸ்’ எனும் பெயரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவர் நடிகர் கார்த்திக் குமாரின் மனைவி ஆவார்.

குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து சுசித்ரா அடையாறில் உள்ள தங்கை வீட்டில் சில ஆண்டுகளாக தங்கியிருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் வீட்டில் இருந்து திடீரென்று சுசித்ரா மாயமாகிவிட்டதாக அவரது தங்கை சுனிதா, கடந்த 11-ந்தேதி அடையாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சுசித்ராவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலை காட்டியது. அங்கு சென்ற பார்த்தபோது பாடகி சுசித்ரா சில நாட்களாக ஓட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. சுசித்ராவை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து பாடகி சுசித்ரா தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story