சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் பரவும் தகவல்கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்? + "||" + Vijay in Kamal's story?

வலைத்தளத்தில் பரவும் தகவல்கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்?

வலைத்தளத்தில் பரவும் தகவல்கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்?
நம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
பிகில் படத்தை முடித்து விட்டு கைதி படம் எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்து விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தற்போது டெல்லியில் நடத்தி வருகிறார்கள். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.

விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதை வைத்து நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக பேசினர். பாக்யராஜ் மகன் சாந்தனு கல்லூரி மாணவனாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்த படம் கமல்ஹாசனின் நம்மவர் கதை என்றும் லோகேஷ் கனகராஜ் கதை உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார் என்று இன்னொரு தகவலும் பரவி உள்ளது. நம்மவர் படத்தில் கமல்ஹாசனுக்கு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரம். அவருக்கும் ரவுடி மாணவனுக்கும் நடக்கும் மோதலை திரைக்கதையாக்கி இருந்தனர்.

கல்லூரியில் அனைவருடனும் மென்மையாக பழகும் கமல்ஹாசன் பிளாஷ்பேக்கில் முரட்டுத்தனமான கோபக்காரர். நம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் இதனை மறுத்தனர். விஜய் நடிப்பது வேறு புதிய கதை என்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...