சினிமா செய்திகள்

ராஜமவுலியின் ‘யமதொங்கா’ ‘விஜயன்’ ஆனது + "||" + Rajamouli's Yamatonga became Vijayan

ராஜமவுலியின் ‘யமதொங்கா’ ‘விஜயன்’ ஆனது

ராஜமவுலியின் ‘யமதொங்கா’ ‘விஜயன்’ ஆனது
‘யமதொங்கா’ என்ற தெலுங்கு படம், ‘விஜயன்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை இயக்கி, இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர், ராஜமவுலி. இவர் இயக்கிய ‘யமதொங்கா’ என்ற தெலுங்கு படம், ‘விஜயன்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருடன் குஷ்பு, பிரியாமணி, மம்தா மோகன்தாஸ், ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்ட படம், இது. ராஜமவுலி இதுவரை 11 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அதில், 5 படங்கள் ‘ரீமேக்’ செய்யப்பட்டன. 2 படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டன. 3 படங்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. தமிழில் வெளிவராத படம், ‘யமதொங்கா’ (தெலுங்கு) இந்த படத்தின் தமிழ் மொழிமாற்ற படத்துக்கு, ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கிறார்.

எம்.ஜெயகீர்த்தி, ரேவதி மேகவண்ணன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...