சினிமா செய்திகள்

அஜித்குமார் படத்தில் இலியானா? + "||" + Is Ajay Kumar Film Iliana?

அஜித்குமார் படத்தில் இலியானா?

அஜித்குமார் படத்தில் இலியானா?
அஜித்குமார் படத்தில் இலியானா நடிக்க உள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.


போலீஸ் அதிகாரி வேடத்துக்காக தனது தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. அஜித் ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்விகள் சமூக வலைத்தளத்தில் எழுந்த வண்ணம் இருந்தன. நயன்தாரா, நஸ்ரியா பெயர்கள் அடிபட்டன.

யாமி கவுதமிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. யாமி கவுதம் தமிழில் ஜெய்யுடன் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் கவுரவம் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இலியானாவிடமும் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அஜித் ஜோடியாக இலியானா நடிக்கிறாரா? அல்லது வேறு வேடமா? என்பது தெரியவில்லை. இவர் ஏற்கனவே விஜய் நடித்த நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். வலிமை படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு 3 வில்லன்கள்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.
2. ‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்
ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்தாமல், ஒரிஜினலாக உயிரை பணயம் வைத்து நடிக்கும் துணிச்சல் மிகுந்தவர், அஜித்குமார்.
3. சர்ச்சையில் சிக்கிய ஷேன் நிகம்: விக்ரம் படத்தில் இருந்து நீக்கம்
நடிகர் ஷேன் நிகம் சர்ச்சையில் சிக்கியதால், விக்ரம் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
4. தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி
தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
5. நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது - சிவசேனா சொல்கிறது
டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தை புறக்கணிப்பது தவறானது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.