சினிமா செய்திகள்

காதல் முறிவு வதந்தியால் நயன்தாரா அதிர்ச்சி; ஜோடி புகைப்படத்தை வெளியிட்டனர் + "||" + Nayanthara shocked by romantic breakup rumor; The couple posted the photo

காதல் முறிவு வதந்தியால் நயன்தாரா அதிர்ச்சி; ஜோடி புகைப்படத்தை வெளியிட்டனர்

காதல் முறிவு வதந்தியால் நயன்தாரா அதிர்ச்சி; ஜோடி புகைப்படத்தை வெளியிட்டனர்
நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவன் காதல் வாழ்க்கை பல வருடங்களாக நீடித்து வருகிறது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெருக்கத்தை வெளிப்படுத்தினர்.
வெளிநாடுகளில் சேர்ந்தே சுற்றினர். கோவில்களுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். அந்த புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த நிலையில் நயன்தாரா திடீரென்று தனது புகைப்படங்களை மட்டும் சமூக வலைத்தளத்தில் வெளியிட தொடங்கினார். 

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியிலும் அவர் அருகில் விக்னேஷ் சிவன் இல்லை. எப்போதும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்தே செல்லும் அவர் இப்போது தனியாக விழாக்களில் பங்கேற்பதையும் தனது புகைப்படங்களை மட்டுமே வலைத்தளத்தில் பகிர்வதையும் பார்த்து ரசிகர்கள் குழம்பினர்.

காதல் முறிந்து விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியாகி அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு காதல் முறிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ஜோடியாக இருக்கும் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காதல் முறியவில்லையா? வாழ்த்துக்கள் என்று கூறிவருகிறார்கள். நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் பக்தி படமாக தயாராகிறது. விரதம் இருந்து இந்த படத்தில் நடித்து வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்
நயன்தாராவை போராளியாக பார்ப்பதாக நடிகை கத்ரினா கைப் தெரிவித்துள்ளார்.
2. சம்பளத்தை மேலும் உயர்த்தினார்!
நயன்தாரா இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். இப்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பது, கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.