நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய இந்தி நடிகை அம்ரிதா தனோவா கைது


நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய இந்தி நடிகை அம்ரிதா தனோவா கைது
x
தினத்தந்தி 11 Jan 2020 5:55 AM IST (Updated: 11 Jan 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்தி வந்த நடிகை அம்ரிதா தனோவா மற்றும் மாடல் அழகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஓட்டலுக்கு போலி வாடிக்கையாளர்களை அனுப்பினர். அப்போது ஓட்டலில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஓட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர்.

மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியாக 32 வயது இந்தி நடிகை அம்ரிதா தனோவா, மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் தின்தோஷி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், கைதான நடிகை அம்ரிதா தனோவா, அன்லிமிடட் நாஷா, பர்வீன் பாபி, தி வேல்ர்டு ஆப் பேஷன் ஆகிய இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் ஆவார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜூகு பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் விபசார கும்பலை பிடித்தனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக இந்திபட தயாரிப்பு நிறுவன மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் விபசார தொழில் செய்து வந்ததாக நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story