சினிமா செய்திகள்

நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் + "||" + Kamal to shoot Indian-2 again after a long rest

நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்

நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்.
இந்தியன்-2  படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினர். பின்னர் ஐதராபாத்திலும், ராஜமுந்திரி சிறைச்சாலையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். அதன்பிறகு போபாலில் படப்பிடிப்பு நடந்தது. 2 ஆயிரம் துணை நடிகர்களுடன் பிரமாண்ட சண்டை காட்சியை அங்கு படமாக்கினர்.

கமல்ஹாசன் 90 வயது முதியவராக வந்து வர்ம கலையால் வில்லன்களுடன் மோதுவதுபோன்ற காட்சிகளை படமாக்கினர். அப்போது கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை யாரோ செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆஸ்பத்திரியில் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து ஓய்வு எடுத்ததாலும் இந்தியன்-2 படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டு நிறுத்தி வைத்தனர். தற்போது கமல்ஹாசன் பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகி உள்ளார்.

பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் 35 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கிறார். இதற்காக அங்கு பிரமாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். பிரியா பவானி சங்கரும் இதில் பங்கேற்று நடிக்கிறார். இந்தியன் படத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. ‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
3. இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: கமல்ஹாசன்,ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.