இந்தியில், கார்த்தியின் ‘கைதி’


இந்தியில்,  கார்த்தியின்  ‘கைதி’
x
தினத்தந்தி 3 Feb 2020 11:15 PM GMT (Updated: 3 Feb 2020 6:47 PM GMT)

இந்தியில் கைதி படத்தை தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து திரைக்கு வந்த கைதி வசூல் சாதனை நிகழ்த்தியது. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மையப்படுத்தி அதிரடி கதையம்சத்தில் வந்த இந்த படத்தின் வெற்றி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. கைதி இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. 

இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘‘30 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் கைதி 2–ம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவதாகவும் கதை தயாராக உள்ளது என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் தெரிவித்துள்ளார்’’ என்றார். மேலும் அவர் கூறும்போது, ‘‘கைதி படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தால் மட்டும் போதாது. ஒரு நல்ல கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் கைதி படக்குழுவினர் முழு உழைப்பை கொடுத்தனர். படத்துக்கு இந்த அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. உங்களுக்காக டில்லி திரும்ப வருவான்’’ என்று கூறினார். 

கைதி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் கைதி படத்தை தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தி கைதியையும் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகர்–நடிகை தேர்வு நடக்கிறது. 

Next Story