சினிமா செய்திகள்

வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்திற்கு காயம்? + "||" + Thala Ajith suffers injuries during bike stunt on Valimai sets

வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்திற்கு காயம்?

வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்திற்கு காயம்?
இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார்.

சென்னையில் இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  படபிடிப்பின் அஜித்குமார் பைக் சண்டை காட்சியில் ஈடுபட்ட  அஜித்குமார்  எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அஜித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்த நடிகர் அஜித் காயத்தோடு வந்து மீண்டும் படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். 

அவர் காயோத்தோடு படபிடிப்பில் ஈடுபட்டதை பார்த்த படக்குழுவினரும், உடன் நடிக்கும் நடிகர்களும் வியப்படைந்தனர். தன்னுடைய காட்சிகளின் படபிடிப்பு முடிந்த பின்னர் அஜித்தின் குடும்ப மருத்துவரின் சென்று சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜிதிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #GetWellSoonTHALA என்ற ஹேஸ்டக் உருவாக்கி அஜித் விரைவில் குணமடைய வேண்டும் என ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்: “உங்களுக்கு நல்லது நடக்கும்” பாராட்டிய நடிகர் அஜித்
பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள இயக்குநர் விஷ்ணு வர்தனை நடிகர் அஜித் பாராட்டி உள்ளது விஷ்ணு வர்தனை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.