விஜய் பட விழாவுக்கு அனுமதி மறுப்பா?


விஜய் பட விழாவுக்கு அனுமதி மறுப்பா?
x
தினத்தந்தி 24 Feb 2020 12:30 AM GMT (Updated: 24 Feb 2020 12:30 AM GMT)

சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டிலும் சோதனை போட்டனர். வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கையை விஜய் ரசிகர்கள் கண்டித்தனர். அரசியல் கட்சிகளும் விமர்சித்தன.

மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது பாடல் வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் படத்தில் நடித்துள்ள சாந்தனுவும், “மாஸ்டர் குழுவினருடன் விரைவில் கோவைக்கு வருவோம். தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார். விஜய்யின் முந்தைய மெர்சல், சர்கார், பிகில் படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் சென்னையில்தான் நடந்தன.

தற்போது மாஸ்டர் பாடல் விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் எனவேதான் கோவைக்கு மாற்றி இருப்பதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

Next Story