சினிமா செய்திகள்

சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு + "||" + Surya's 'Aruva' title in controversy

சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு

சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன.

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி வருகின்றனர். சூர்யா அண்ணன், தம்பி என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இருவருக்கும் நடக்கும் மோதலே படம் என்றும், கிராமத்து பின்னணியில் படத்தை எடுக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சூர்யா படத்துக்கு அருவா என்ற தலைப்பு வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே பெயரில் பாடலாசிரியர் ஏகாதசி படம் இயக்கி உள்ளார். இயக்குனர் தருண்கோபி தயாரித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனாலும் பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஏகாதசி கூறும்போது, “அருவா என்ற பெயரில் நாங்கள் படம் எடுத்துள்ளோம். இதே பெயரை சூர்யா படத்துக்கு வைத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார். இதனால் சூர்யா பட தலைப்பு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி
‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
2. ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!
திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.
3. தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’
சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
4. படமாகும் குறுநாவலில், சூர்யா!
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து சூர்யா நடிக்கப்போகும் படம் எது, அந்த படத்தை இயக்கப் போகிறவர் யார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது.
5. ரசிகர்களை கவர்ந்த சூர்யா பட டிரெய்லர்
சூர்யா, சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 38-வது படம். கதாநாயகியாக அபர்ணா முரளி வருகிறார். இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.