சார்மி யோசனை


சார்மி யோசனை
x
தினத்தந்தி 20 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-20T23:07:03+05:30)

அரசு கொடுக்கும் ஆலோசனையை ஏற்று அனைவரும் ஒன்று சேர்ந்தால் கொரோனாவை வெல்லலாம் என்று நடிகை சார்மி கூறினார்.

“கொரோனா, உலகத்தையே கலவரப்படுத்தி உள்ளது. இது இரண்டாம்  உலகப்போரை விட பயங்கரமானது என்று பிரதமரே சொல்லி இருக்கிறார். இதை மனதில் வைத்து அவர் சொல்வதற்கு முன்பே அனைத்து படப்பிடிப்புகளையும், நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டோம். கொரோனாவை ஒழிப்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். அரசு சுகாதார துறை கொடுக்கும் ஆலோசனையை ஏற்று சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கொரோனாவை வெல்லலாம்.”

Next Story