சினிமா செய்திகள்

பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? ஸ்ரீரெட்டி காட்டம் + "||" + Sri Reddy makes a nasty comment about Nayanthara's past relationships with 'married and unmarried' men

பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? ஸ்ரீரெட்டி காட்டம்

பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? ஸ்ரீரெட்டி காட்டம்
பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? என கேள்வி எழுப்பிய ரசிகர்களிடம் ஸ்ரீரெட்டி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
சென்னை,

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லியும் அரை நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரையுலகையே அதிர வைத்தார். நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஐதராபாத்தை விட்டு வெளியேறி சென்னையில் குடியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பல விஷயங்களை பேசி வருகிறார் அவர். தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.

இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள் என பலருடன் காதலித்துள்ளார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும், வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம் என கூறினார்.

ஸ்ரீரெட்டி இவ்வாறு கூறியிருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.