சினிமா செய்திகள்

மொட்டை அடித்த ஜோதிர்மயி + "||" + Jyothirmayi’s latest picture leaves netizens shocked

மொட்டை அடித்த ஜோதிர்மயி

மொட்டை அடித்த ஜோதிர்மயி
ஜோதிர்மயியின் புதிய புகைப்படம் ஒன்றை கணவர் அமல் நீரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
சென்னை,

தமிழில் தலைநகரம், நான் அவனில்லை, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 2004-ல் நிஷாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2011-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு 2015-ல் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் ஜோதிர்மயியின் புதிய புகைப்படம் ஒன்றை கணவர் அமல் நீரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஜோதிர்மயி தலையில் முடியில்லை. மொட்டையடித்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்தின் கீழே இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்து செல் என்ற பொருள்படும் சமஸ்கிருத ஸ்லோக வரிகள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜோதிர்மயியின் இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. எதற்காக மொட்டை அடித்துள்ளார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் அவர் தரப்பில் விவரம் சொல்லவில்லை. இந்த புகைப்படத்தை பிரபல மலையாள நடிகைகள் ரீமா கல்லிங்கல், நஸ்ரியா ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...