கல்லூரி பேராசிரியர் கேரக்டருக்கு விஜய் சரியாக இருப்பார் - இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ பதில்


கல்லூரி பேராசிரியர் கேரக்டருக்கு விஜய் சரியாக இருப்பார் - இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ பதில்
x
தினத்தந்தி 9 May 2020 12:50 PM IST (Updated: 9 May 2020 12:50 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி பேராசிரியர் கேரக்டருக்கு விஜய் சரியாக இருப்பார் என இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ கூறியுள்ளார்.

சென்னை,

நெட்ஃப்ளிக்ஸில் மிகப்பெரிய ஹிட் தொடராக கொண்டாடப்படுவது கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்திய மனி ஹெய்ஸ்ட் (Money Heist). இத்தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடரில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்திய திரை நட்சத்திரங்களில் யார்? கல்லூரி பேராசிரியர்  கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ, நடிகர் விஜய் சரியாக இருப்பார் என தெரிவித்தார். பொகோட்டா கதாபாத்திரம் அஜித்துக்கும், போலீஸாக வரும் சுவாரஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கும் சரியாக இருக்கும் என்றும் பெர்லின் கதாபாத்திரம் ஷாருக் கானுக்கும், டென்வெர் கதாபாத்திரத்துக்கு ரன்வீர் சிங் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் அலெக்ஸ் ரோட்ரிகோ குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Next Story