கொரோனா ஊரடங்கு தளர்வு ஷாப்பிங் செய்த சமந்தா!
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நடிகை சமந்தா ஷாப்பிங் செய்தார்.
ஐதராபாத்,
கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் வீட்டில் முடங்கியிருந்த நடிகை சமந்தா, நாகசைதன்யா கடந்த சில நாட்களாக இருவரும் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கார் ட்ரிப், பைக் ட்ரிப் என பறந்து கொண்டிருக்கின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன் காரில் தங்களது செல்ல நாய்க் குட்டியுடன் ஜோடியாக ஐதராபாத்தில் வலம் வந்தனர் . இந்நிலையில் சமந்தா கணவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
ஹெல்மெட் அணிந்து சைதன்யா பைக் ஓட்டுகிறார். சமந்தா பின்னாடி அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதுகில் ஒரு பையும் கையில் ஹெல்மெட்டும் வைத்திருக்கிறார்.
பைக்கில் சென்று ஷாப்பிங் செய்தபோது எடுத்த படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். ஷாப்பிங் செய்தபோது ஒருசிலர் சமந்தாவை அடையாளம் கண்டு ஹாய் சொல்லப் பதிலுக்குத் தனது வழக்கமான புன்னகையை உதிர்த்துவிட்டு சிட்டாக பறந்தார் சமந்தா.
Related Tags :
Next Story