சினிமா செய்திகள்

படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை! + "||" + Acting while studying Malayalam actress!

படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை!

படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை!
மலையாள நடிகையான மகிமா நம்பியார் படித்துக்கொண்டே நடித்ததாக தெரிவித்துள்ளார்.

‘சாட்டை’ என்ற படத்தின் மூலம் பிரபலமான மகிமா நம்பியார், கேரளாவை சேர்ந்தவர். 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியது. ‘சாட்டை’ படம் இவரை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது. சினிமாவில் பிரபலமாகி விட்டாலும், மகிமா நம்பியார் படிப்பை விடவில்லை. படித்துக்கொண்டே நடித்தார்.

மொசக்குட்டி, அகத்திணை ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு இவர் அருண் விஜய் ஜோடியாக நடித்த ‘குற்றம் 23’ படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில், பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுபோல், ‘மகாமுனி’ படமும் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

“அந்த படம், நடிப்பு என்றால் என்ன? என்று கற்றுக்கொடுத்தது. கதாபாத்திரமாக மாறுவது எப்படி? என்பதை கற்று தந்தது. கடினமாக உழைத்தால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது” என்கிறார், மகிமா நம்பியார்.