சினிமா செய்திகள்

ஊரடங்கினால் மன அழுத்தம்: டி.வி நடிகை தற்கொலை + "||" + Depression by curfew: TV actress suicide

ஊரடங்கினால் மன அழுத்தம்: டி.வி நடிகை தற்கொலை

ஊரடங்கினால் மன அழுத்தம்: டி.வி நடிகை தற்கொலை
ஊரடங்கினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, டி.வி நடிகையான பிரேக்‌ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல இந்தி டி.வி. நடிகை பிரேக்‌ஷா மேத்தா. (வயது 25) மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் மும்பையில் தங்கி இருந்து தொடர்களில் நடித்து வந்தார். மேரி துர்கா, லால் இஷ்க் உள்பட பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற கிரைம் பேட்ரோல் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தனது சொந்த ஊரான இந்தூருக்கு சென்று 2 மாதங்களாக அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் வீட்டில் வழக்கம்போல் இரவு தூங்கச்சென்ற அவர் மறுநாள் காலையில் நீண்டநேரமாகியும் படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது மின் விசிறியில் தூக்கு போட்டு பிரேக்‌ஷா மேத்தா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியானார்கள். தற்கொலை செய்வதற்கு முன்பு கடைசியாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கனவுகள் மரணிப்பது என்பது மிகவும் மோசமானது என்று பதிவிட்டு உள்ளார். ஊரடங்கினால் தொடர்களில் நடிக்க முடியாமல் மன அழுத்தத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஊரடங்கால் வறுமை காரணமா? போலீசார் விசாரணை
மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊரடங்கால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. டெல்லி இந்தியா கேட் பகுதியில் உடற்பயிற்சி செய்ய திரண்ட மக்கள் !
ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
3. ஊரடங்கின் நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஊரடங்கு மூலோபாய நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
4. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.35% ஆக உயர்ந்து உள்ளது
கிராமப்புற வேலைகள் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது என இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் கூறி உள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.