சினிமா செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் மரணம் + "||" + Wajid Khan Of Music Composer Duo Sajid-Wajid Dies At 42

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் மரணம்

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் மரணம்
பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் ( வயது 42) சீறுநிரக தொற்று காரணமாக காலமானார் .
மும்பை

பிரபல பாலிவுட்இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் ( வயது 42) சீறுநிரக தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன் செம்பூரின் சூரானா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார்.

வாஜித் இறந்த செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுத்தி படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது 

அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது, சிறிது நாட்களுக்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்தது ... கடந்த நான்கு நாட்களாக அவர் வென்டிலேட்டரில் இருந்தார், அவரது நிலைமை மோசமடையத் தொடங்கியது இன்று காலை காலமானார் எனகூறினார்.

சஜித்- வாஜித் இருவரும் சல்மானின் 1998 ஆம் ஆண்டு வெளியான "பியார் கியா தோ தர்ணா க்யா" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமனார்கள் மற்றும் நடிகரின் பல்வேறு படங்களில் "கார்வ்", "தேரே நாம்", "தும்கோ நா பூல் பேயங்கே", உள்பட படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். 

சல்மான் கானின் படங்களான "வாண்டட்", "தபாங்" மற்றும் "ஏக் தா டைகர்" ஆகிய படங்களில் பணிபுரிந்து உள்ளனர்.

"மேரா ஹீ ஜல்வா", "ஃபெவிகால் சே" போன்ற படங்களில் சல்மானுக்காகவும், "ரவுடி ரத்தோர்" படத்திலிருந்து "சிந்தா தா சிட்டா சிட்டா" படத்தில் அக்‌ஷய் குமார் ஆகியோருக்காகவும் வாஜித் பின்னணி பாடி உள்ளார். அவர் சமீபத்தில் சல்மானின் "பியார் கரோனா" மற்றும் "பாய் பாய்" பாடல்களை பாடி உள்ளார்.

வாஜித் கான் மறைவுக்கு பிரபல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா
திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.
2. காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா?- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி
திருமணத்துக்குப் பின் காதல் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களிடம் ஏன் கேட்பதில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கொந்தளித்துள்ளார் ஷரத்தா ஸ்ரீநாத்.
3. தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகர் - சோகத்தில் திரையுலகினர்
டிவி நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் 'திரில்லர்'; நாயகி அப்சரா ராணி புகைப்படங்கள்
ராம்கோபால் வர்மாவின் அடுத்த கிளு கிளுப்பு திரைப்படம் ’திரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணி எனவும் அறிமுகம் செய்துள்ளார்.
5. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? நடிகர் நெப்போலியன்
இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.