இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை பரிந்துரைத்த விவேக்


இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை பரிந்துரைத்த விவேக்
x
தினத்தந்தி 1 Jun 2020 3:05 PM IST (Updated: 1 Jun 2020 3:05 PM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை நடிகர் விவேக் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை

கொரோனா அச்சுறுத்தலால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக திரைத்துறையினர் வீட்டில் முடங்கியுள்ளனர். தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சினிமா படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் சமூகவலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் பிரபலங்கள், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர், இளைஞர்களுக்கு தாங்கள் பரிந்துரைக்கும் நூல்களை( கண்டிப்பாக படிக்க வேண்டிய) குறிப்பிடலாமே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்திருக்கும் நடிகர் விவேக், “எத்தனையோ மிக நல்ல புத்தகங்கள் உள்ளன. இப்போது என் மனதுக்குப் பட்டதை பரிந்துரைக்கிறேன்.

இனிய எளிய தேன் தமிழ் பருக: திருவருட்பா.
சுய வரலாறு:the other side of me!
உடற்பயிற்சி : make the connectionயோகநெறி அறிய:living with H.masters
மாணவர்களுக்கு:அக்னி சிறகுகள்” என்று விவேக் குறிப்பிட்டுள்ளார்.




Next Story