சினிமா செய்திகள்

தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் + "||" + Hindi actor who starred in the film biography of Dhoni Singh Rajput commited suicide

தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம்

தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம்
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,

பிரபல இந்தி நடிகரும் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.


அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான, “காய் போ சே” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ஆவார். இவரது மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தோனி போன்ற திறமையான வீரர் இந்திய அணிக்கு தேவை: மைக்கேல் ஹோல்டிங்
தோனி போன்ற திறமையான வீரர் இந்திய அணிக்கு தேவை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
2. டோனியை விமர்சிப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன் - சையத் கிர்மானி
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் உயர்வு சறுக்கல் இருப்பதும் இயல்புதான் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.