சினிமா செய்திகள்

முடங்கிய திரையுலகம் இணைய தளத்துக்கு வரும் தெலுங்கு படங்கள் + "||" + Telugu movies coming OTT platform

முடங்கிய திரையுலகம் இணைய தளத்துக்கு வரும் தெலுங்கு படங்கள்

முடங்கிய திரையுலகம் இணைய தளத்துக்கு வரும் தெலுங்கு படங்கள்
கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது.

கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் புதிய படங்களை தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். வரலட்சுமி நடித்துள்ள டேனி, யோகிபாபு நடித்துள்ள காக்டெயில், அருண் விஜய்யின் ‘வா டீல்,’ ‘மம்மி சேவ், ‘அண்டாவ காணோம்’ ஆகிய படங்களும் இணைய தளத்தில் வர உள்ளன.

 இந்த நிலையில் தெலுங்கு திரையுலகினரும் டிஜிட்டல் தளத்துக்கு மாறுகிறார்கள். ராணா தயாரிப்பில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சித்து, சீரத் கபூர், ஷாலினி ஆகியோர் நடித்துள்ள ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ்லீலா’ படத்தை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். பிரபல இயக்குனர் ராம்கோபால் டைரக்டு செய்துள்ள ‘நேக்டு நங்கா நக்னம்’ தெலுங்கு திகில் படம் இன்று டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் இந்த படத்தை இணைய தளத்தில் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதில் ஸ்விட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு படங்கள் ஓடிடி தளத்துக்கு வர உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
2. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? படக்குழு விளக்கம்
கொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
5. அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை.