காளை மாட்டுடன் பவனி ஊரடங்கில் விவசாயியாக மாறிய சூரி
நகைச்சுவை நடிகர் சூரி தனது சொந்த கிராமத்தில் விவசாய வேலைகளை கவனிக்கிறார்.
கொரோனாவால் திரைப்பட தொழில் முடங்கி உள்ளதால் நடிகர், நடிகைகள் வேலையின்றி வீட்டுக்குள் முடங்கி உள்ளார்கள். சிலர் வேறு தொழில்களுக்கு மாறி உள்ளனர். நடிகை தமன்னா டிஜிட்டல் தளத்தில் தொகுப்பாளராக மாறி உள்ளார். நடிகை கீர்த்தி பாண்டியன் வயலில் நாற்று நட்டு விவசாயம் செய்கிறார். டைரக்டர் பாண்டிராஜ் சொந்த கிராமத்துக்கு சென்று தனது நிலத்தில் பயிரிட்டுள்ள வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்கிறார்.
தமிழில் ஒரு மழை நான்கு சாரல், பாரதிபுரம் நானும் ஒரு பேய்தான் படங்களை இயக்கி உள்ள டைரக்டர் ஆனந்த் சென்னையில் மளிகை வியாபாரம் செய்கிறார். இந்தி நடிகர் சோலங்கி திவாகர் பழ வியாபாரம் செய்கிறார். மராத்தி நடிகர் ரோஹன் பட்னேகர் கருவாடு விற்கிறார். மலையாள நடிகர் சுதீஷ் அன்சாரி மீன் வியாபாரம் செய்கிறார். இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி சொந்த கிராமத்தில் விவசாய வேலைகளை கவனிக்கிறார். கிராமத்து தெருக்களில் தனது காளை மாட்டுடன் பவனி சென்று குளத்தில் காளையை குளிப்பாட்டும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி போகும் எங்க கருப்பன் நடந்து போனா” என்றும் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story