சினிமா செய்திகள்

தமிழ் சினிமா திரையுலகில் "குரூப்பிசம்" - நடிகர் நட்டி நடராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு + "||" + "Groupism" in Tamil cinema - Actor Natty Nataraj accused of sensationalism

தமிழ் சினிமா திரையுலகில் "குரூப்பிசம்" - நடிகர் நட்டி நடராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ் சினிமா திரையுலகில் "குரூப்பிசம்" - நடிகர் நட்டி நடராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
சதுரங்க வேட்டை, மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்த நட்டி நடராஜ் தமிழ் திரையுலகை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்பான பிரச்சினை இந்தி பட உலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தி பட உலகிற்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சதுரங்க வேட்டை, மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்த நட்டி நடராஜ் தமிழ் திரையுலகை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

அதில்,  தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது..., ஆனால், குரூப்பிசம் இருப்பதாக தெரிவித்துள்ளார். யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை யாரோ நிர்ணயம் செய்வதாகவும் நட்டி நடராஜ் குற்றம்சாட்டி உள்ளார்