கொரோனா விழிப்புணர்வு படத்தில் யோகிபாபு


கொரோனா விழிப்புணர்வு படத்தில் யோகிபாபு
x
தினத்தந்தி 21 Aug 2020 11:45 PM GMT (Updated: 2020-08-22T01:08:34+05:30)

கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும் சமூக விலகலை கடைபிடிக்கவும் கைகளை அடிக்கடி கழுவவும் வற்புறுத்தி அரசு விழிப்புணர்வு படங்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படங்களில் சசிகுமார், சுஹாசினி, தேவயானி ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படங்களை கட்டில் திரைப்படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ்பாபு இயக்கினார். தற்போது அரசின் இன்னொரு கொரோனா விழிப்புணர்வு படத்தையும் அவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்து இருக்கிறார். அவருடன் மனோபாலாவும் நடித்துள்ளார்.

இந்த படம் குறித்து யோகிபாபு கூறும்போது, “நான் நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு படத்தை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்த்து மனம் விட்டு சிரித்து இருக்கிறார். இது எனக்கு பெருமையாக உள்ளது” என்றார். இ.வி.கணேஷ்பாபு கூறும்போது, நான் பத்துக்கும் மேற்பட்ட கொரோனா விழிப்புணர்வு படங்கள் எடுத்துள்ளேன். ஆனால் யோகிபாபுவை வைத்து இயக்கியது சவாலாக இருந்தது. படத்தில் அவர் பேசும் வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்” என்றார்.

Next Story