சினிமா செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா + "||" + The corona threat was Nayanthara who went on a separate flight

கொரோனா அச்சுறுத்தல் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா

கொரோனா அச்சுறுத்தல் தனி விமானத்தில் சென்ற நயன்தாரா
நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கையும் மீறி நாடு முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன. விமான சேவைகளையும் குறைத்து உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். உள்நாட்டில் விமான பயணம் செய்யும் பயணிகளுக்கும் பாதுகாப்பு உடைகள் கொடுத்தே ஏற்றி செல்கிறார்கள்.


இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மற்ற பயணிகளோடு செல்வதை தவிர்த்து தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து பயணித்ததாக கூறப்படுகிறது. தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சி விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கி வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நயன்தாரா கறுப்பு நிற பேண்ட் சர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து ஹாலிவுட் நடிகை சாயலில் நடந்து செல்கிறார். விக்னேஷ் சிவன் கையில் ஜெர்க்கின் முதுகில் பேக்கை மாட்டிக்கொண்டு செல்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. காதலிப்பது போரடித்ததும் திருமணம் செய்து கொள்வோம் என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.