சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் சகோதரி மீது போலீசில் புகார் + "||" + Sushant Singh's sister lodged a complaint with the police

சுஷாந்த் சிங் சகோதரி மீது போலீசில் புகார்

சுஷாந்த் சிங் சகோதரி மீது போலீசில் புகார்
சுஷாந்த் சிங் சகோதரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கிறது. சுஷாந்த் சிங் மரணத்துக்கு அவரது காதலி ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போதை பொருள் கும்பலுடன் ரியாவுக்கு தொடர்பு இருந்ததாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு போலீசார் ரியா வீட்டில் சோதனை நடத்தினர். அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர். ரியாவின் சகோதரர் ஷோவிக் போதை பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைதாகி உள்ளார்.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் சகோதரி பிரியங்கா சிங் மீது ரியா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுஷாந்த் சிங்குக்கு போலி மருந்துகளை பிரியங்கா சிங் கொடுத்துள்ளார். அவர் மீதும் போலி மருந்துக்கு பரிந்துரை செய்த தருண்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். நான் கொடுத்த மருந்துகளை ஏற்காமல் அவரது சகோதரி கொடுத்த மருந்துகளைத்தான் அவர் சாப்பிட்டார் என்றும் கூறியுள்ளார். இந்த புகாரை மும்பை போலீசார் ஏற்று சுஷாந்த் சிங் சகோதரி மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.