சினிமா செய்திகள்

நடிகர் துரைப்பாண்டியன் காலமானார் + "||" + Acter Duraipandian Dies

நடிகர் துரைப்பாண்டியன் காலமானார்

நடிகர் துரைப்பாண்டியன் காலமானார்
பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்.

மௌனம் பேசியதே’, ‘ரன்’, ‘ஜெமினி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் துரைப்பாண்டியன்

துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகும் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆவார். மேலும் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் இருக்கிறார்.

நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன் நெஞ்சுவலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைப்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.